வாழைப்பழ சீப்பில் இருந்த அபூர்வ வாழைப்பழம்..!!

இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக  சமூக வலைத்தளங்களில் தகவல்  வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கே இந்த அதிசய வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இந்த வாழைப்பழத்தின் புகைப்படத்தினை குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

Related posts