போராட்டத்தினை கொச்சைப்படுத்துபவர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்துபவர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுவான தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று காலை ஆரம்பமானது.

மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசனுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் ஆரம்பமானது.வேட்பாளர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் இணைந்து இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தினை முன்னெடுத்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்¸ கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்¸முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.நடராஜா¸இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தலைவர் கி.சேயோன் மற்றும் பிரதேசசபையின் தவிசாளர்கள்¸பிரதி தவிசாளர்கள்¸தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பலத்தினை நாங்களே இழக்கின்றோம் என்பதை மட்டக்களப்பு தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

Related posts