பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான தகவல்..!!


பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு வரும் போதும், வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது சிக்கல் அல்ல என சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய் தொற்று ஏற்படும் என கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை நீக்கி வேறு ஒரு பாதுகாப்பான துணிக்குள் வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக் கவசம் அணிவது கட்டாயமான என்பது தொடர்பில் வினவிய போது சுகாதார பணிப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts