நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்தான 4 இடங்கள்..!!


இலங்கையினுள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்படும் ஆபத்துக்கள் கொண்ட நான்கு இடங்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் விமான நிலையம், பேருந்து மற்றும் ரயில்கள், பாடசாலைகள் மற்றும் தேர்தல் இடங்கள் ஆகியவை இந்த ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.   

குறிப்பாக பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போது சமூக இடைவெளி குறித்து எவ்வித அவதானமும் செலுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில்  கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு உள்ள வாய்ப்புகள் நெருங்கியுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை முக்கிய இடத்திற்கு வருவதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புகளே காரணம் என கூறிய அவர் நாட்டில் இரண்டாவது அலை ஏற்படாமல் நாடு பாதுகாப்பாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Related posts