சுவிற்சர்லாந்தில் இலங்கையர் மீது கத்திக்குத்து தாக்குதல்..!!

சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த சம்பவம் லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதி ஒன்றிலலேயே  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்தாரியும், தாக்குதலுக்கு இலக்கான நபரும் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட மோதலின் போதே இந்த  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். 
இந்த சம்பவத்தின் போது கழுத்துப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான 45 வயதுடைய இலங்கையர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை காயமடைந்த நபர் அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் தாக்குதலினை மேற்கொண்டதாக கூறப்படும் 65 வயதுடைய நபரை கைது செய்ய லுட்சன் மாநில பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதியில் அதிகளவில் தமிழ்க் கடைகள் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts