சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

சர்வதேச ரீதியாக கடந்த 24 மணி நேரத்தினுள் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 326 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயே அதிக தொற்று பதிவாகியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியாக ஒரு கோடியே 10 லட்சம் மக்களை பாதித்துள்ளது.

இது தவிர, கடந்த 7 மாத காலப்பகுதியினில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளன

Related posts