கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்..!

பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் பயணித்த வாகனம் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியின் இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

Related posts