வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்  ஆலய தேர்த்திருவிழா இன்று (03) சிறப்புற இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று (03) நண்பகல் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி உள்வீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்ததோடு வெளிவீதி சென்று தேரிலேறி வெளிவீதி சுற்றி அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

இங்கு பக்தர்கள் காவடி பாற்செம்பு அடியளித்தல் தூக்கு காவடி என பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை மேற்கொண்டனர்.

இதேவேளை நாளை மாலை ஆலயத்தின் தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.

Related posts