பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் இராஜினாமா..!!

கொரோனா வைரசின் தாக்கதால் பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார பாதிப்பை அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்திருந்தார்.    அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்தார். எட்வர்ட் பிலிப் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அதிபர் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் ஹஸ்டெக்சை நியமனம் செய்துள்ளார்

Related posts