தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ், தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த வருடத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

37 வயதான அவர், 2001 ஆம் ஆண்டு கிரிக்கட் விளையாட ஆரம்பித்து நிலையில், 2006 ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

நான்கு உள்ளுர் போட்டிகளில் சிறப்பு வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ள அவர், அதிக எண்ணிக்கையிலான பிடிகளை எடுத்து ஆட்டமிழக்க செய்த இரண்டாவது வீரராவார்.

20 வருடங்கள் தொடர்ச்சியாக கிரிக்கட் விளையாடியுள்ள இவர், இந்த வருட இறுதி வரை நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடி தமது திறமையை மேலும் வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியுடன் ஹமில்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது சதத்தை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts