சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள் பயிற்சி..!!

அமெரிக்கப் கடற்படை இரண்டு விமானந் தாங்கி கப்பல்களையும் அதனுடன் பல போர்க்கப்பல்களையும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலுக்கு இராணுவப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளது.

யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை ஏழாவது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜோ ஜெய்லி உறுதி செய்துள்ளார்.

சுதந்திரமான, தாராளமான இந்திய – பசிபிக் பிராந்தியம் என்ற நோக்கத்துக்கு ஆதரவாக சீனக் கடலில் இவ்விரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், இந்தப் பகுதியிலுள்ள நான்கு போர்க் கப்பல்களுடன் இணைந்து, விமானங்களின் தாக்குதிறனை இந்தக் கப்பல்கள் பரிசோதித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நேரத்தில் ஒரே பிராந்தியத்தில் இரு மிகப்பெரிய இராணுவ பலம் பொருந்திய அமெரிக்க மற்றும் சீன இராணுவங்கள பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறு நடைபெறுவது அரிது என கூறப்படுகின்றது

Related posts