கல்வியமைச்சரின் பெயரை பயன்படுத்தி தொழில்பெற முயன்ற நபர் கைது..!!

சட்டவிரோதமான முறையில் தொழில்பெற முயன்ற நபரொருவரை மேல் மாகாண காவற்துறை விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் இவ்வாறு தொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை-வல்கம பிரதேசத்தில் வசித்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts