ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது..!!

முல்லேரியா-கௌனிமுல்ல பகுதியில் 25 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து இந்த போதைபொருள் மோசடி கையாளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts