பிரித்தானியாவின் குற்றத் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்..!!

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான மிகவும் இரகசிய தகவல் தொடர்பு முறைமையை பிரித்தானியாவின் தேசிய குற்றத் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரையில் இதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக அங்கு 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. என்க்ரோச் என அழைக்கப்படும் வலையமைப்பு ஒன்று, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட ஏனைய குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 2 டொன்களுக்கு அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 54 மில்லியனுக்கும் (பவுன்) அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts