சாரதிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சில வரையறைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசி ஊடாக முன்கூட்டியே திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அலுவலக வளாகத்திற்குள் வருகின்ற சேவை பெறுநர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய முகக் கவசங்களை அணிதல், கிருமித்தொற்று நீக்கம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணுதல் உட்பட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றுதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts