ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி- ICMR அறிவிப்பு..!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியா அதில் ஒரு படி முன்னேறியுள்ளது. தற்போது, பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்ஸின் தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் இதன் பரிசோதனைகள் முடிந்து விடும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குள் பொதுமக்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.

Related posts