அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம்..!!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தின் அளுநர் கிரேக் அபோட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த மாநிலத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இவ்வாறு முகக்கவங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநாலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 2400 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் தற்போது அது 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதேநேரம், அண்மையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் டெக்ஸாஸ் மாநிலத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. எனினும் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் பாரயளவில் அதிகரித்து வருவதால் மட்டுப்படுத்தபட்ட அளவில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 28 இலட்சத்து 37 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அங்கு 1 இலட்சத்து 31 ஆயிரத்து 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 99 இலட்சத்து ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் காரணமாக 5 இலட்சத்து 24 ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 61 இலட்சத்து 50 ஆயிரத்து 606 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts