நியூசிலாந்து சுகாதார அமைச்சர் இராஜினாமா..!!

நியூசிலாந்தின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த காலங்களில் அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்தார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது இராஜினமா கடிதத்தை வழங்கினார். ஆனால் அவரது இராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் இணை சுகாதார அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாம் சுகாதார அமைச்சு பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதில் பயனில்லை என தெரிவித்து தமது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கிளார் கையளித்துள்ளார். அதேநேரம் நியூசிலாந்து சுகாதார அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர்; ஜசிந்தா ஆர்டெர்ன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் கொரோனா வைரசால் இதுவரை  ஆயிரத்து 530 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து கொரோனா வைரசல் பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts