நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் சஜித்..!!

யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை ஆதீன குரு முதல்வரை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்துள்ள சஜித் பிரேமதாச இன்று நல்லூர் ஆலய வீதியில் உள்ள நல்லை ஆதீனத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு நல்லை ஆதீன குருமுதல்வரிடம் ஆசியினை பெற்றதுடன் அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி பிரதான வேட்பாளர் கனேஷ் வேலாயுதம், உமாசந்திர பிரகாஷ், கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ் நாகவிகாரைக்கும் சென்ற இந்த குழுவினர் விகாராதிபயைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

Related posts