சற்று முன்னர் மேலும் 06 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2060 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2054 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் கட்டாரில் இருந்து வருகை தந்த 05 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 222 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1827ஆகவும் காணப்படுகின்றது.

இதவரை கொரோனாவால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts