சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம்: புதிய பொருளாதாரத் தடைகளுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்..!!

உலகெங்கிலும் உள்ள நாடுகளால் கண்டனம் செய்யப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தை ஹொங்கொங் மீது சீனா விதித்த பின்னர், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஹொங்கொங் தொடர்பான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த நடவடிக்கை, சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பிற்குச் செல்வதற்கு முன்பு இதை செனட் சபை அங்கீகரிக்க வேண்டும்.

1997ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி முடிவடைந்தபோது, 50 ஆண்டுகளாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களை சீனாவின் சட்டம் முடிவுக்குக் கொண்டுவருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

‘இந்த சட்டம் ஹொங்கொங் மக்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான, கடுமையான ஒடுக்குமுறை ஆகும், இது அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சுதந்திரங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது’ என்று வெள்ளை மாளிகை சபாநாயகர் நான்சி பெலோசி கூறினார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், 1985 சீன- பிரித்தானியா கூட்டு அறிவிப்பின் ‘தெளிவான மற்றும் தீவிரமான மீறல்’ என்று கூறினார்.

இந்த அறிவிப்பின் கீழ், 1997ஆம் ஆண்டில் ஹொஙெ;காங் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சில சுதந்திரங்கள் ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ ஒப்பந்தத்தின் கீழ் குறைந்தது 50 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டன.

Related posts