சட்டத்தரணிகள் மனு தாக்கல் …!!

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றத்தில் முன்னிலையாக்கவேண்டும் என்று கோரிய மனுவை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சட்டத்தரணிகள் சிலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

ஏற்கனவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட வேளையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பான தீர்;மானம் இன்று ஜூலை முதலாம் திகதி வெளியிடப்படும் என்று நீதிவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஏப்ரல் மாதத்தில் கைதுசெய்யப்பட்டார்;.

Related posts