இலங்கை மீதான சர்வதேச தனிக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அழைப்பு ….!

கடந்த கால மீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மீதான சர்வதேச தனிக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அழைப்பு விடுத்துள்ளது.

கனடா¸ ஜெர்மனி¸ வடக்கு மெசிடோனியா¸ மொண்டினீக்ரோ மற்றும் பிரித்தானியா சார்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த இலங்கை தொடர்பான தனிக் குழு¸ நாட்டின் திறந்த ஜனநாயக மற்றும் பொறுப்புடன் செயற்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது.

இலங்கை தொடர்பான தனிக்குழுவின் சார்பில் பேசிய பிரித்தானியாவின் மனித உரிமைகளுக்கான சர்வதேச தூதர் ரீட்டா பிரஞ்ச்¸ கடந்த பெப்ரவரியில்¸ இலங்கை அரசாங்கம்¸ 30-1 தீர்மானத்தை இனி ஆதரிக்கப்போவதில்லை என்று சுட்டிக்காட்டியமையை நினைவூட்டியுள்ளார்.

இது இலங்கையில்; ஒரு நிலையான அமைதியை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகத்துடன் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கும்; ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

உள்நாட்டு செயல்முறைகள் மூலம் இந்த கொள்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த உறுதிப்பாட்டைக் கூறியுள்ளது.

இந்த நிலையில்¸ எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று இலங்கை தொடர்பான தனிக்குழு வலியுறுத்தியது.

இதேவேளை கொரோனவைரஸ் கட்டுப்பாட்டுக்காலத்தின்போது மிருசுவிலி;ல் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவவீரரை விடுவித்தமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹி;ஸ்புல்லாஹ்வை கைதுசெய்தமை போன்ற சம்பவங்களை பிரித்தானிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts