2011 ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதியாட்டத்தின்போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு..!!

2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான உலக கிண்ண இறுதியாட்டத்தின்போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித தொடர்புகளும் கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிறிய தகவல் கிடைத்தால் கூட அது தொடர்பில் இந்திய கிரிக்கட் சபை விசாரணைகளை முன்னெடுக்கமுடியும் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் விளையாட்டு;த்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இது தொடர்பான சந்தேகத்தை அண்மையில் எழுப்பியிருந்தார்.

ஆமைச்சரின் இந்தக்கூற்றுக்கு முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

குறித்த இறுதிப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி 6 விக்கட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே சச்சின் மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோரின் விக்கட்டுக்களை இழந்தபோதும் மஹேந்திரசிங் தோனி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் 109 என்ற இணைப்பாட்டத்துடன் முன்னேற்றம் கண்டது.

இறுதியில் யுவ்ராஜ் சிங் மற்றும் மஹேந்திரசிங் தோனி ஆகியோர் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இந்தியா பெற்ற இந்த வெற்றி¸ உலக்கிண்ண இறுதிப்போட்டியில் 1983 க்கு பின்னர் 28 வருடங்கள் கழித்து காத்திருந்து பெற்ற முதல் வெற்றியாக அமைந்திருந்தது.

Related posts