முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய பணிப்புரை…

முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்குமாறு கடந்த மார்ச் மாதத்திலேயே கோரப்பட்டனர்.

எனினும் அதனை சிலர் கண்டுகொள்ளவில்லை. ராஜாங்க அமைச்சர்கள் தொடர்ந்தும் தமது பதவிகளில.; இயங்க முடியாது என்று கடந்த மே மாதத்தில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் பலர் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை திருப்பி கையளிக்கவில்லை.

இந்தநிலையில் குறித்தவேட்பாளர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் அவர்கள் தேர்தலில் தெரிவுசெய்யப்படும்போது அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்

Related posts