மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான வாக்குமூலத்துக்காக நாளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..!!

மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான வாக்குமூலத்துக்காக நாளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கிய தரப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் 29ஆம் திகதி வாக்குமூலம் வழங்க வருமாறு அழைக்கப்பட்டபோதும் ரணில் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் ஜூலை 3ம் திகதியன்று வருவதாக ரணில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குற்றப்புலனாய்வுத்துறையின் கோரிக்கையின்படி ஜூலை 2ஆம் திகதியன்று வாக்குமூலம் வழங்க ரணில் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

மத்திய வங்கி முறிவிற்பனை மோசடி தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க¸ முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் எஸ் பாஸ்கரலிங்கம் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் ஏற்கனவே செயல் காவல்துறை அதிபருக்கு பணித்ததன் அடிப்படையிலேயே ரணிலிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

Related posts