புதிய பொய் ஒன்றை கூறுவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது..!!

ஜனாதிபதி தேர்தலில் தாம் கூறிய பொய்யை மறைக்க அரசாங்கம் புதிய பொய் ஒன்றை கூறுவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னாள் நாடர்ளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய அரசியல் தொடர்பற்ற கோட்டாபயவை தெரிவுசெய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் தற்போது தாம் கூறிய அந்த பொய்யை மறைக்கும் வகையில் கோட்டாபயவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்கிறது.

கோட்டாய ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா எம்சீசீ உடன்படிக்கையை கிழத்தெறிவார் என்று ஜனாதிபதி தேர்தலின்போது கூறப்பட்டது.

எனினும் தற்போது அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான திருடர்களை கோட்டாய தண்டிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி தேர்தலின்போது கூறியது.

ஆனால் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அந்த திருடர்களுடன் கோட்டாபய அரசாங்கம் இணங்கிசெயற்படுகிறது என்றும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts