கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!!

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 17 அகவைக்கொண்ட ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பவில்லை.

Related posts