ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களுக்கான பணி நேரத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திலகரட்ன பண்டார தலைமையிலான குழு அமைச்சருக்கு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது.

இதன்படி அரச பணியாளர்களுக்கான பணிகள் முற்பகல் 9மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45க்கு நிறைவுபெறும். தனியார்துறையினருக்கான பணிகள் முற்பகல் 9.45க்கு ஆரம்பமாகி மாலை 6.45;க்கு நிறைவுபெறும்.

இந்த நேரமாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருட்கள் வீணடிக்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts