அடையாள அட்டைகளை சமர்ப்பிப்பது அவசியம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..!!

அஞ்சல் மூல வாக்களிப்பி;ன்போது வாக்காளர்கள் உறுதிசெய்யப்பட்ட அடையாள அட்டைகளை சமர்ப்பிப்பது அவசியம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிப்பின்போது அடையாள அட்டை¸ சாரதி அனுமதிப்பத்திரம் அலுவலக அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றில் ஒன்றை வாக்காளர் சமர்ப்பிக்கவேண்டும்.

இதனை சமர்ப்பிக்காதவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்களி;க்க செல்பவர்கள்¸ சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். கைககளுக்கு கிருமி தொற்றுக்களை பயன்படுத்தவேண்டும். அத்துடன் வாக்களிப்பதற்காக நீல நிற அல்லது கறுப்பு நிற பேனையை எடுத்துவரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts