பௌத்த பிக்கு ஒருவர் இன்று உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்…

பொலநறுவை அரந்தலாவயில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின்போது படுகாயமடைந்த பௌத்த பிக்கு ஒருவர் இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய எவராவது தற்போது உயிருடன் உள்ளவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அன்டௌல்பத்த புத்தசார தேரரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்தமனுவில் செயல் காவல்துறை அதிபர்¸ தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர்¸ சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டு அரந்தலாவையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட தாக்குதலின்போது 33 பௌத்த பிக்குகள் மற்றும் நான்கு பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

Related posts