குவைத்தில் இலங்கையர் ஒருவர் கைது..

குவைத்தில் மதுபான உற்பத்தியகம் ஒன்றில் இருந்து மதுபானத்தை சட்டவிரோதமாக தமது இருப்பிடத்துக்கு எடுத்துச்சென்ற இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சல்வா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.

குறித்த மதுபான உற்பத்தியத்தில் இரவுவேளையில் கடமையில் இருந்து காவலர்கள்¸ ஒருவர் பொதி ஒன்றை சுமந்து செல்வதை கண்டு அவரை பின்தொடர அவர் குறித்த பொதியை வீசியபின்னர் அருகில் உள்ள கட்டிட பகுதியில் ஒளிந்துக்கொண்டார்.

இதனையடுத்து காவலர்கள் அவரை கைதுசெய்தனர்.இதன்போது அவரிடம் இருந்து 39 பீப்பாய் மதுபானமும் மதுபானம் உற்பத்திசெய்யும் கருவிகளும் மீட்கப்பட்டதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.

Related posts