அரவிந்த டி சில்வா இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் விசாரணைக்குழுவின் முன் முன்னிலையானார்.

2011 உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியின் இறுதி ஆட்டம் நிர்ணயம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமமேயினால் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் விசாரணைக்குழுவின் முன் முன்னிலையானார்.

குறித்த போட்டியின்போது அரவிந்த டி சில்வாவே அணியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்டார்.

இந்தநிலையில் அவரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே இன்று அவர் விசாரணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார்.

Related posts