அமீர் நஸீர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்..!!

களுத்துறை நகர சபைத் தவிசாளர் அமீர் நஸீர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23ஆம் திகதியன்று களுத்துறை வேர்னொன் பெர்ணான்டோ மைதானத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கூட்டத்தை கூட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக களுத்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சி தலைவர் நிலாந்தவும் மற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் களுத்துறை நகரசபை தவிசாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts