108 நாட்களின் பின்னர் பாடசாலை ஆரம்பம்

நாட்டில் கொரோணா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது.

பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர்¸ ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா உத்தியோகத்தர்களும்¸ ஊழியர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நிருவாக செயற்பாடுகள் யாவும் இடம்பெற்றன. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசாங்கத்தினது பெருமுயற்சியின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட நிலையில் பாடசாலைகளை திறப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சும் சுகாதார பிரிவினரும் வழங்கினர்.

இதற்கமைவாக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்றன. பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் அனைவருக்கும் கை கழுவுவதற்கான முன்னேற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டிருந்;ததுடன்¸ வருகை தரும் ஆசிரியர்கள் கைகளை கழுவும் செயற்பாடுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்த நிலையில் கற்றல் நடவடிக்கை ஆரம்பித்தல் தொடர்பிலும் அதிபர் தலைமையில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts