வேல்ட் முஸ்லிம் லீக்கிடம் இருந்து 5 மில்லியன் டொலர்களை பெற்ற..!!

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் பின்னர் வேல்ட் முஸ்லிம் லீக்கிடம் இருந்து 5 மில்லியன் டொலர்களை பெற்றதாகவும் அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டு உயிர்;த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்;டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் கடந்த வாரத்தில் சாட்சியமளித்த செத் சரன அமைப்பின் பிரதிநிதியான வணக்கத்துக்குரிய தந்தை லோரன்ஸ் ராமநாயக்கவினால் சுமத்தப்பட்டது.

எனினும் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன¸ முஸ்லிம் வேல்ட் லீக்கின் தலைவர் ஷேக் மொஹமட்பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவிடம் இருந்து 5 மில்லியன் டொலர்களை தாம் பெற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

5 மில்லியன் டொலர்களை தருவதாக வேல்ட் முஸ்லிம் லீக்கின் தலைவர் தாமரைத்தடாகம் மண்டத்தில் நடைபெற்ற தேசிய சமாதான மாநாட்டின்போது உறுதியளித்திருந்தார். இதற்கான ஆவணங்களும் வேல்ட் முஸ்லிம் லீக்கினால் கையளிக்கப்பட்டன.

எனினும் பணம் பெற்றுக்கொள்ளப்படவில்லை..

பாதிப்புக்கள் தொடர்பில் வேல்ட் முஸ்லி;ல் லீக் கோரிய ஆவணங்களை இலங்கை அரசாங்கம் கையளிக்காமை காரணமாகவே அந்த நிதியுதவி கிடைக்கவில்லை என்று மைத்ரிபால சிறிசேன தமது அறிக்கையில் தெரிவித்துள்ளாh.

Related posts