மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட சர்வதேச போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கிடையேயான டெஸ்ட் தொடர் ஓல்ட் ட்ரபோட்டில்  அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறைந்த பார்வையாளர்களுடனேயே இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. எந்த விளையாட்டாக இருப்பினும், ரசிகர்கள் அதிக அளவில் சமூகம் அளிக்கும் போதே அதன் தன்மை மற்றும் தரம் உயர் மட்டத்தை அடையும் என வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். பந்தில் உமிழ் நீர் பிரயோகம் செய்து அதனை பிரகாசிக்க வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர் அது ஒரு பிரச்சனை அல்லவென தெரிவித்தார்.

Related posts