கருத்துக்கூற விரும்பவில்லை என்று முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன்..!!

2011ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே வெளியிட்ட குற்றச்சாட்டில் வீரர்கள் தொடர்புபடவில்லை என்று கூறியிருப்பதால் அது குறித்து தாம் கருத்துக்கூற விரும்பவில்லை என்று முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்;றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தாம் பங்கேற்றபோதும் விளையாட்டு வீரர்களை பற்றி அவர் கூறாமையால் அது தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்று முரளிதரன் குறிப்பிட்டார்.

அணியின் தலைவரோ அல்லது உதவி தலைவர் என்றவகையில் இறுதிப்போட்டிக்;கான அணியை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் சம்பந்தப்படவில்லை.

அணியை தெரிவுக்குழு¸ பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணித்தலைவர்களே தீர்மானிப்பர்.

இந்தநிலையில் தெரிவாளர்கள் உரிய நேரத்தில் உரிய வீரர்களை தெரிவுசெய்யவேண்டும்.

தமக்கு விருப்பமான வீரர்களை தெரிவுசெய்யமுடியாது என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related posts