உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கை..!!

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விளையாட்டு பொருட்களை இனங்கண்டு அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். ஏற்கனவே நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களுக்காக 2 ஆயிரத்து 319 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 30 சதவீதமான விளையாட்டு உபகரணங்கள் நாட்டிலேயே தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் குறித்த செலவீனத்தை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் தயாரிக்க கூடிய விளையாட்டு பொருட்களை இனங்கண்டு அதனை அறிக்கையிடுமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts