21ஆம் நூற்றாண்டில் மிகவும் பெறுமதிமிக்க வீரராக முத்தையா முரளிதரன்

21ஆம் நூற்றாண்டில் மிகவும் பெறுமதிமிக்க வீரராக விஸ்டன் கிரி;க்கட் மாத இதழ் இலங்கையில் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பெயரிட்டுள்ளது.
வுpஸ்டன் மாத இதழில் 21ஆம் நூற்றாண்டின் முன்னணி வீரர்களாக 30பேரை பட்டியலிட்டுள்ளது.
அதில் முதலாவதாக முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரையான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஸ்டன் கிரிக்கட் மாத இதழின் சாம் ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் 800 டெஸ்ட் விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இதில் 2000 முதல் 2010வரையான பகுதியில் 85போட்டிகளில் 573 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
எனினும் 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜேம்ஸ் என்டர்சன் 151 போட்டிகளில் 584 விக்கட்டுகளை கைப்பற்றினார் என்று சாம் ஸ்டோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts