2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

2015ஆம் ஆண்டு தாம் தோல்வியடைந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருந்தாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

“ஜனநாயகத்தின் தோல்வியும் இலங்கைக்கு எதிரான வெளிநாடுகளின் சூழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இலங்கையில் 1970இல் ரஸ்ய- சீனாவும் இணைந்து ஏற்படுத்திய சோசலிஸ அரசாங்கம் என்று யாரும் கூறவில்லை.

எனினும் 1977இல் பதவிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கம் அமரிக்க- பிரித்தானிய தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று யாரும் கூறவில்லை.

எனினும் இலங்கையில் இதுவரை காலம் இல்லாத அளவில் 2015 ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருந்தது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் வெற்றிக்;கொள்ளப்பட்ட பின்னர் 2010ஆம் ஆண்டு இந்த வெளிநாட்டு தலையீடு ஆரம்பமானது.

இது 2015வரை தொடர்ந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்தமை அனைவருக்கும் தெரிந்தவிடயம் என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்

2015 ஆம் ஆண்டில் அதிகாரத்தை அரசாங்கம் ஒன்று ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நாட்டில் நிலவிய நிலைமை ஒரு விரோதமான வெளிநாட்டு படையெடுக்கும் படையால் கைப்பற்றப்பட்டதற்கு ஒப்பானது என்று ராஜபக்ஷ குறிப்பிட்:டுள்ளார்.

“அவர்கள் இந்த நாட்டில் உள்ள தேசியவாத அரசியல்வாதிகளை துன்புறுத்தினர்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்த ஆயுதப்படைகளை மனச்சோர்வடையச் செய்வதற்கும்¸ பயனற்றவர்களாக மாற்றுவதற்கும் முயற்சித்தனர்.

மிகக் குறைந்த பதவிகளில் இருந்து பாதுகாப்புத் தலைவர் வரை ஆயுதப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு¸ பல வாரங்கள்¸ மாதங்கள் அல்லது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள நோக்கம் உள்ளூர் மக்களின் மனதில் தோற்றத்தை ஏற்படுத்துவதுடன் இவர்கள் போர்வீரர்கள் அல்ல¸ திருடர்கள் மற்றும் கொலைகாரர்கள் என்ற கருத்தை உலகுக்கு உணர்த்துவதும் ஆகும்¸ ”என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts