பொதுபோக்குவரத்துக்காக விமானநிலையங்களை திறப்பது தாமதமாகும்- பிரசன்ன ரணதுங்க

தொடர்ந்தும் நாட்டுக்கு திரும்புவோரின் பதிவுகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக பொதுபோக்குவரத்துக்காக விமானநிலையங்களை திறப்பது தாமதமாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் முழுமையாக விமான நிலையங்களை திறப்பது ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் இறுதிக்கு பிற்போடப்படலாம் என்று பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஆகஸ்ட் முதலாம் திகதியே விமானநிலையங்களை திறப்பதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts