நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்…!

கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளை திறக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இந்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர், ஆசியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை சுத்தமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் கட்டங்கட்டங்களாக பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்

Related posts