உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கர்தினாலின் அரசியல் பேச்சுக்களால் கிறிஸ்தவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர்..!!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரத்தின்போது ஹரின் வெளியிட்டதாக கூறப்படும் விமர்சனம் தொடர்பிலான பிரச்சனைக்கு தீர்வுக்காணப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதன்போது உடனிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கர்தினாலின் அரசியல் பேச்சுக்களால் கிறிஸ்தவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர் என்று ஹரின் கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் ஹரின் பெர்ணான்டே தமது கருத்து திரிபுப்படுத்தப்பட்டதாக பின்னர் தெரிவித்திருந்தமையும் குறி;ப்பிடத்தக்கது.

Related posts