இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இந்தியாவில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக எண்ணிக்கையான 19 ஆயிரத்து 906 புதிய கொவிட் 19 தொற்றுதியானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவை அடுத்து நான்காவது அதிக எண்ணிக்கையிலான கொவிட் 19 தொற்றுதியானவர்களை கொண்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

Related posts