ஜூன் 30ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா..!!

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை¸ மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு அமையவே முடிவுசெய்யப்படும் என தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி¸ நோய்ப் பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசாங்கம் சரியாகப் பின்பற்றுவதால்¸ இங்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்பெயின்¸ அமெரிக்கா¸ இத்தாலி போன்ற நாடுகளில் பரவல் அதிகம் ஏற்பட்டு அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்¸ தமிழ்நாட்டில் உயிரிழப்பு குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts