கொழும்பில் வீதியில் நடமாடும் நூலக திட்டம்..!!

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கைக்கு 1000 புலமைப்பரிசில்களை வழங்க இணங்கியிருக்கிறது.

அலாமா இக்பால் புலiமைப்பரிசில்களின்கீழ் 5 வருடங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பட்டப்படிப்புக்கள் பட்டபின்படிப்புக்கள்¸ பொறியியல்துறை¸ இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானத்துறைகளில் இந்த புலமைப்பரிசில்களை பாகிஸ்தான் வழங்குகின்றது.

இந்தப்புலமைபரிசில்களில் முழுமையான கல்விக்கட்டணம்¸ தங்குமிட வசதி¸ கல்விக்கான கொடுப்பனவுகள்¸ ஒரு வழி விமான அனுமதிச்சீட்டு என்பன உள்ளடங்குகின்றன.

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மத்தியில் இருந்து அதிக விண்ணங்களை எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானிய உயர்கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புpரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மஹ்முட் சாட் கட்டாக் இந்த புலமைப்பரிசில்கள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் வீதியில் நடமாடும் நூலக திட்டம் ஒன்றையும் பாகிஸ்தான் நடைமுறைப்படுத்தவுள்ளதாக உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் அறிவித்திருக்கிறார்.

Related posts