பாகிஸ்தான் இலங்கையை பாராட்டியுள்ளது..!!

கொரோனவைரஸ் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமைக்காக பாகிஸ்தான் இலங்கையை பாராட்டியுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான்இ இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
இந்த தொலைபேசி கலந்துரையாடலின்போது இலங்கையின் ஜனாதிபதியும் பாகிஸ்தானிய பிரதமரும் இருதரப்பு உறவுகள்இபிராந்திய உறவுகள்இ கொரோனவை கட்டுப்படுத்த இலங்கை எடுத்த நடவடிக்கைகள் என்பன பகிர்ந்துக்கொள்ளப்பட்டன
இந்தியாவின் ஆளுகைக்குள் உள்ள ஜம்மு மற்றும் காஸ்மீர் தொடர்பிலும் இம்ரான்கான் தமது நிலைப்பாட்டை இலங்கையின் ஜனாதிபதியுடன் பகிர்ந்துகொண்டார்.
இதேவேளை கொரோனவைரஸ் தொற்றில் இருந்து விடுப்பட்டவுடன் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இம்ரான்கான் கோட்டாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமரிக்காவின் 4.8 மில்லியன் டொலர்கள் தொடர்புடைய மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் முரண்பாடுகளும் பாதகமான விளைவுகளும் உள்ளடங்கியுள்ளதாக ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு இன்று அதன் இறுதியறிக்கையை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்தது.
இந்தநிலையில் 2017இலும் 2018இலும் இரண்டு கட்டங்களாக மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லலித்தசிறி குணருவன் தெரிவித்துள்ளார்.
இதன்போது 7.4மில்லியன் டொலர்கள் மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் எவ்வித கணக்குகளும் காட்டப்படவில்லை
நாடாளுமன்றத்தில் இந்த உடன்படிக்கையை சட்டமாக ஏற்றுக்கொண்டபின்னர் அதில் திருத்தங்களை சமர்ப்பிக்கும்போது அது உடன்படிக்கையை மீறும் செயலாகும்.
உடன்படிக்கையின் எந்தவொரு நிபந்தனையையும் இரண்டு பிரதிநிதிக் திருத்திக்கொள்ளலாம் என்று நிலை இருக்கிறது.
.இது நாடாளுமன்றத்தின்இறைமையை பாதிக்கும் செயலாகும் என்று குணருவன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எம்சீசீ உடன்படிக்கையை செய்து கொண்ட நாடுகளின் நிலை ஆரோக்கியமாக இல்லை என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Related posts