அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் முரண்பாடு..!!

அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் முரண்பாடுகளும் பாதகமான விளைவுகளும் உள்ளடங்கியுள்ளதாக ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு இன்று அதன் இறுதியறிக்கையை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்தது.

இந்தநிலையில் 2017இலும் 2018இலும் இரண்டு கட்டங்களாக மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லலித்தசிறி குணருவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது 7.4மில்லியன் டொலர்கள் மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் எவ்வித கணக்குகளும் காட்டப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் இந்த உடன்படிக்கையை சட்டமாக ஏற்றுக்கொண்டபின்னர் அதில் திருத்தங்களை சமர்ப்பிக்கும்போது அது உடன்படிக்கையை மீறும் செயலாகும்.

உடன்படிக்கையின் எந்தவொரு நிபந்தனையையும் இரண்டு பிரதிநிதிக் திருத்திக்கொள்ளலாம் என்று நிலை இருக்கிறது.

.இது நாடாளுமன்றத்தின்இறைமையை பாதிக்கும் செயலாகும் என்று குணருவன் குறிப்பிட்டுள்ளாh.;

இதேவேளை எம்சீசீ உடன்படிக்கையை செய்து கொண்ட நாடுகளின் நிலை ஆரோக்கியமாக இல்லை என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Related posts