யோகா ராம்தேவ் விற்பனை செய்த கொரோனா மருந்து- அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!!

யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி ஆயூர்வேத மருந்துப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நாடு முழுவதும் அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கொரொனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுதர்வேத மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி விளம்பரம் செய்து வந்த நிலையில். அந்த விளம்பரத்தை நிறுத்துமாறு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு நேற்றுஅறிவுறுத்தியுள்ளது.  மேலும், கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் எனவும், முறையான ஆய்வுகள் வெளியாகும்வரை எவ்வித் விளம்பரமும் செய்யக்கூடாது என பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள், நோய் எதிர்ப்புத் திறன் மேம்பாடு , காய்ச்சல் , சளி ஆகியவற்றிற்கன மருந்து உற்பத்தி செய்வதற்க்காக மட்டுமே உரிமை வழங்கினோம் என குறிப்பிட்டுள்ளது.

Related posts